வேண்டாம், வேண்டாம் டாஸ்மாக் கடை வேண்டாம்; போராட்டத்தில் குதித்த பெண்கள்

சென்னை, தண்டையார் பேட்டை பகுதியில், புதிதாக அமையவுள்ள டாஸ்மாக் கடை வேண்டாம் என பெண்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை தண்டையார்பேட்டை பகுதிக்கு உட்பட்ட சுந்தரம் பிள்ளை நகரில் அரசு மதுபானக்கடை அமைய இருப்பதை எதிர்த்து அப்பகுதி வாசிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒன்றாக சேர்ந்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு நாட்களுக்கு முன்னராகவே அப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் நிறைந்த பகுதியில் மதுபான கடைகள் திறக்கக்கூடாது என்றும் போட்டிகள் ஒட்டி இருந்தனர் இந்த நிலையில் இன்று அப்பகுதி மக்கள் ஒன்றாக சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதிவாசிகள் கூறுகையில் பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே மதுபானக்கடை திறக்க இருப்பதாகவும் அருகிலேயே கிறிஸ்தவ வழிபாட்டு தலம் பள்ளிக்கூடம் பேருந்து நிலையம் ஆகியவை இருக்கும் நிலையில் அதற்கு நடுவில் மதுபானக்கடையை திறக்கக்கூடாது என்று வழியுறுத்துவதாகவும் தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.