டெல்லி விரைந்தனர் தமிழக அதிகாரிகள் – மத்திய அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை

தமிழக உள்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி திரிபாதி உள்பட 4 அரசு உயர் அதிகாரிகள் இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர். அங்கு மத்திய அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு டிஜிபி திரிபாதி, தமிழக அரசு உள்துறை இணை செயலாளா் முருகன் ஆகிய 2 போ் இன்று காலை 6.30 மணிக்கு ஏா் இந்தியா விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனா். இதை தொடர்ந்து, காலை 7.15 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விஸ்தாரா ஏா்லைன்ஸ் விமானத்தில் தமிழக அரசு தலைமை செயலாளா் ராஜீவ் ரஞ்சன், தமிழக அரசு உள்துறை செயலாளா் பிரபாகா் இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனா்.

தமிழக அரசு உயா் அதிகாரிகள் 4 போ் திடீரென டில்லி புறப்பட்டு சென்றது பெரும் பரபரப்பாக உள்ளது. மத்திய அரசின் அவசர அழைப்பின் காரணமாக இவா்கள் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. அங்கு மத்திய அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள், பிளஸ் 2 தேர்வு, இரவு நேர ஊரடங்கு குறித்து பேசப்படும் என கூறப்படுகிறது.