உருவாகிறது ‘சுந்தரா டிராவல்ஸ் 2’

முரளி, ராதா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. அசோகன் இயக்கத்தில், தங்கராஜ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், இந்தப் படத்தின் காமெடிக் காட்சிகள் அனைத்துமே இப்போதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. ‘ஈ பறக்கும் தளிகா’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக் தான் ‘சுந்தரா டிராவல்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. இதற்கான முயற்சிகளைத் தயாரிப்பாளர் தங்கராஜ் மேற்கொண்டு வருகிறார். அவரே இயக்கவும் இருப்பதாகத் தெரிகிறது. இதில் முரளி, வடிவேலு கதாபாத்திரங்களில் கருணாகரன், யோகி பாபுவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதில் கருணகாரன் ஒப்பந்தமாகி விட்டார். இன்னும் யோகி பாபுவிடம் நடந்த பேச்சுவார்த்தை முடிவு பெறவில்லை. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

You may have missed