அரண்மனை 3 படத்தை பார்த்துவிட்டு அருமையாக இருக்கிறது என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின்..!

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை3’.

அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இந்த படம் குறித்து சுந்தர்.சி கூறியதாவது.

அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வசூலையும் வெற்றியும் தந்தது. ஆனால் உடனடியாக அதன் அடுத்த பாகத்தை எடுக்க முடியாது. அதற்கான கதையும் நடிகர்கள், தொழில்நுட்ப குழுக்களும் அமைந்தால் மட்டுமே சாத்தியம்.

மற்ற நடிகர்களை போல் இல்லாமல் நடித்து கொடுத்து செல்லாமல் பிசினஸ் ரீதியாக எனக்கு உதவியாக இருந்தார் ஆர்யா. அரண்மனை படம் என்றாலே நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் ஆண்ட்ரியா, ராஷி கன்னா, சாக்ஷி அகர்வால் எல்லாருக்குமே முக்கிய கதாபாத்திரம் தான்.

உதயநிதி ஸ்டாலின்
அரண்மனை 1ம் பாகத்தை உதயநிதி வெளியிட்டார். தற்போது அரண்மனை 3 திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறார். இந்த படத்தை பார்த்த ஒரே நபர் உதயநிதி மட்டும்தான்.
அரண்மனை 1 படத்தை பார்த்து கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொன்னவரும் அவர்தான். தற்போது அரண்மனை 3 படத்தை பார்த்துவிட்டு அருமையாக இருக்கிறது என்று சொன்னவரும் அவர்தான் இவ்வாறு சுந்தர்.சி பேசினார்.