சன் டிவி நெட்வொர்க் பங்குகளுக்கு செமஅடி: 52 வாரங்களில் இல்லாத வகையில் சரிந்தது: 10% மதிப்பு வீழ்ச்சி

மும்பைப் பங்குச்சந்தையில் சன் டிவி நெட்வொர்க்கின் பங்குகள் மதிப்பு கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவு இன்று சரிந்தது. பங்கு மதிப்பு 1.5சதவீதம் சரிந்து ரூ.402.55க்கு வீழ்ச்சி அடைந்தது.

கடந்த 2 நாட்களில் மட்டும் சன் டிவி நெட்வொர்க் பங்கு மதிப்பு 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

2022-23ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான முடிவுகள் வந்தபின் சன் டிவி பங்குகள் மதிப்பு பாதளத்துக்குச் சென்றது.

2022, மே 19ம் தேதி சன் டிவி நெட்வொர்க் பங்கு ரூ.409 என்ற அளவில் இருந்தது.

மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஒளிபரப்பு நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி என 6 மொழிகளில் இயங்குகிறு.

பண்பலைவானொலி நிலையங்களையும் சன் நெட்வொர்க் நடத்தி வருகிறது. இதுதவிர ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிந் உரிமையாளராகவும் சன் டிவி நெட்வொர் இருக்கிறது.

டிஜிட்டல் ஓடிடியில் சன் நெக்ஸ்ட் நடத்துகிறது.
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையில் கிடைத்த தொகையில் 50 சதவீதத்தை அணிகளுக்கு பிசிசிஐ பிரித்து வழங்கஇருக்கிறது.

அப்போது சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளராக சன் டிவி நெட்வொர்க்கிற்கு கணிசமான பங்கு தொகையை பிசிசிஐ வழங்கும்.

பங்குச்சந்தையில் கடந்த 6 மாதங்களாகவே சன் டிவி நெட்வொர்க் பங்குகள் சரிவில்தான் உள்ளன, கடந்த 6 மாதத்தில் பங்குமதிப்பு 18 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 24 சதவீதம் பங்கு மதிப்பு சரிந்தது குறிப்பிடத்தக்கது.