விஷால் வீட்டில் கல் வீச்சு; 4 பேரிடம் விசாரணை; போதையில் தவறு நடந்ததாக வாக்குமூலம்..!

சென்னை, அண்ணா நகர் பகுதியில் நடிகர் விஷால் வீட்டில், கல் வீசிய சம்பவம் தொடர்பாக நான்கு பேரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில் தவறுதலாக நடந்ததாக தெரிவித்தனர்.

சென்னை, அண்ணா நகரில், நடிகர் விஷால் வீடு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் காரில் வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டின் மீது கல் வீசி எறிந்தனர்.

இதில் விஷால்  வீட்டில் இருந்த கண்ணாடி உடைந்து. சம்பவத்தன்று நடிகர் விஷால் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருந்தார்.

இது குறித்து அண்ணா நகர் போலீசில் நடிகர் விஷாலின் மானேஜர் ஹரி அளித்த புகார் அளித்தார்.

அண்ணா நகர் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கல் வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

அதில் நான்கு பேர் பிடிப்படனர்.  மீன் ஏற்றுமதி தொழில் செய்யும் கொளத்தூரை சேர்ந்த பிரவீன்குமார் (29), ராஜேஷ்(29), ஓட்டல் நடத்தி வரும் அண்ணா நகரை சேர்ந்த சபரீஸ்வரன் (29), கட்டுமான பொறியாளரான மணிரத்தினம் (28) ஆகியோர் என தெரிந்தது.

சம்பவத்தன்று இரவு அனைவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு காரில் வந்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் அந்த தகராறு காரணமாக கற்களை வீசி தாக்கி கொண்டோம், அதில் ஒரு கல் விஷால் வீடு மீது விழுந்ததாக தெரிவித்தனர்.