இன்று பாரத் பந்த்: அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக அழைப்பு: 10 முக்கிய விவரங்கள்

மத்திய அரசு கொண்டு வந்த அக்னி பாத் எனும் ராணுவத்துக்கான ஆள்சேர்ப்புத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளநிலையில், பாரத்பந்த் நடத்த சில அமைப்புகள் இன்று அழைப்பு விடுத்துள்ளன.

இதனால் பல்வேறு மாநிலங்களில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹரியானா, பஞ்சாப், பிஹார், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு வந்தாலும் அதைத் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசும் ராணுவத் தளபதிகளும் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபடுவோருக்கு ராணுவத்தில் இடமில்லை. வன்முறைக்கும்ஒழுக்கக்குறைவுக்கும் ராணுவத்தில் இடமில்லை.

போலீஸ் ஆய்வு இல்லாமல் எந்த ஒரு நபரும் ராணுவத்தில் சேரமுடியாது. போராட்டத்தில் வன்முறையில் ஈடபடவில்லை என்று போலீஸார் அளிக்கும் சான்றின் அடிப்படையில் ராணுவத்துக்கு வர

முடியும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை இன்று சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

  1. இன்று பாரத் பந்த்துக்குசில அமைப்புகள் அழைப்பு விடுக்கப்பட்டதால், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
  2. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 20ம் தேதி பள்ளிகள் மூடப்படுகின்றன என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  3. லாதியானா ரயில்நிலையத்தில் போராட்டக்காரர்கள் கடந்த சனிக்கிழமை வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வலியுறுத்தியுள்ளார்
  4. ஹரியானா மாநிலம், பரிதாபாத்திலும், டெல்லி எல்லைகளிலும் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபோடுவோர், வன்முறையில்ஈடுபடுவோர்களை வீடியோ மூலம் பதிவு செய்து கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். சாலையில் தடைகளை ஏற்படுத்துதல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் போன்றவற்றை போலீஸாரும்,மாவட்ட நிர்வாகமும் அனுமதிக்ககூடாது என்று ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
  5. டெல்லியின் எல்லையான நொய்டாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  6. அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போராட்டத்தால் 400க்கும் மேற்பட்ட ரயில்கள் சேவைபாதிக்கப்பட்டன, 12க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பலரயில்கள் மாற்றுப்பாதையில்திருப்பி விடப்பட்டன.
  7. அக்னி பாத் தி்ட்டம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , முப்படைத் தளபதிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
  8. அக்னிபாத் திட்டம் செயல்படுத்தப்படும். கொரோனா காரணமாகத் தாமதமானது. இந்தத்திட்டத்தை திரும்பப் பெறும்பேச்சுக்கு இடமில்லை என ராணுவத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்
  9. அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளி்ட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
  10. அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் சிங்கைச் சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று மனு அளி்க்க உள்ளனர்