இலங்கை-யில் ரன்னும் வறட்சி! டாப்ஆர்டர் பேட்ஸ்மேன் கொலாப்ஸ்: முதல் டெஸ்டில் பாக். ஆதிக்கம்..!

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று தொடங்கி கல்லே நகரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக விளையாடினர்.

இலங்கை முதல் இன்னிங்ஸில் 52 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது.

கல்லே நகரில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிஇன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணாரத்னே பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

வலுவான வேகப்பந்துவீச்சைக் கொண்டிருக்கு பாகிஸ்தான் அணி தொடக்கத்திலிருந்தே இலங்கை அணிக்கு நெருக்கடி அளித்தது.

ஷாகீன் ஷா அப்பிரிடி, ஹசன் அலிஇருவரும் தங்களின் துல்லியமான பந்துவீச்சால் மிரட்டினர். இதனால் இலங்கை அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இலங்கை கேப்டன் திமுத் கருணா ரத்னே ஒரு ரன்னில் அப்பிரிடி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

அதன்பின் மென்டிஸ், பெர்னான்டோ இருவரும் ஓரளவுக்கு நிதானமாக பேட்செய்தனர். இருவரும் 49 ரன்கள் சேர்த்தநிலையில், பிரித்தனர். மென்டிஸ் 21 ரன்னில் யாசிர் ஷா பந்துவீச்சில் வெளியேறினார்.

அதன்பின் அடுத்த 8 ரன்கள் சேர்ப்பதற்குள் அடுத்தடுத்து இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பெர்னான்டோ (35), மேத்யூஸ் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர்.

5-வது விக்கெட்டுக்கு தனஞ்செயா, சந்திமால் ஜோடி ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து ஆடினர். தனஞ்செயா 11 ரன்னில் அப்ரிடி பந்துவீச்சில் க்ளீ்ன் போல்டாகி ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த டிக்வெலா(4),ரமேஷ் மெண்டிஸ்(11),ஜெயசூர்ய(3) என வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் அடித்த சந்திமால், இந்தப் போட்டியிலும் தனிநபராக நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். நிதானமாக ஆடிய சந்திமால், 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

சந்திமால் மட்டும் இந்த ரன்களை ஸ்கோர் செய்யாமல் இருந்திருந்தால், இலங்கை அணி 120 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

9-வது விக்கெட்டுக்கு தீக்சனா 23, ரஜிதா 3 ரன்களில் விளையாடி வருகிறார்கள். பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி3 விக்கெட்டுகளையும், யாசிர் ஷா, ஹசன் அலி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.