தண்ணீர் குடிக்க வந்து அல்லிக் கொடியில் சிக்கிய புள்ளிமான்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் தண்ணீர் குடிக்க வந்து சிக்கிக் கொண்ட புள்ளிமான் பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, தூரப்பள்ளம் கிராமத்தில், தொரக்குளம் உள்ளது. அப்போது வழித்தவறி வந்த புள்ளிமான் ஒன்று தண்ணீர் குடிக்க குளம் அருகே வந்த போது அல்லிக் கொடியில் அதன் உடல் சிக்கிக் கொண்டன. மீண்டு வர முடியாமல் மான் கத்தியபடி இருந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் புள்ளிமானை காப்பாற்றி வனத்துறை அதிகாரி சுரேஷிடம் ஒப்படைத்தனர்.