காலாவதி சாக்லேட் சாப்பிட்ட குழந்தைகளுக்கு, வாந்தி, மயக்கம் கடைக்காரருக்கு, ரூ.5 ஆயிரம் அபராதம்

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில், காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டன. இதையடுத்து கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் ஏற்பட்டன.

சென்னை, கொருக்குப்பேட்டை, அனந்த நாயகி நகரை சேர்ந்தவர் தேவ பிரசாத் (45). இவர் உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஆவார். இவர் ஞாயிற்றுக்கிழமை தோறும் அங்குள்ள தேவாலயத்திற்கு செல்வது வழக்கம். குழந்தைகளையும் அழைத்து செல்வார்.

அப்போது தெலுங்கு செட்டி தெருவில் உள்ள அம்மன் டிரேடர்ஸ் என்ற கடையில் இருந்து சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளார். சாக்லெட் சாப்பிட்ட குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டன. பின்னர் அந்த சாக்லேட் காலாவதியானது என தெரிய வந்தது. மாநகராட்சி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார்  கொடுத்தார். இதையடுத்து அந்த அதிகாரிகள் கடையை சோதனையிட்டு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கடையின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.