முதல்வர் ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இயக்குநர் ஷங்கர்

இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் நேற்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக காலை 11.15க்கு மணமகன் மணமகள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தார்.

திருமண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் தனது மகள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

You may have missed