அன்பு நண்பரை இழந்துவிட்டேன் – கே.வி. ஆனந்த் மறைவுக்கு ஷங்கர் இரங்கல்

பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். நள்ளிரவில் ஏற்பட்ட நெஞ்சு வலியால் தானே காரை ஓட்டிச் சென்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அட்மிட் ஆகியுள்ளார் கே.வி.ஆனந்த். பின்பு அதிகாலை 3 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கே.வி.ஆனந்த் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

“பேரதிர்ச்சி அடைந்திருக்கிறேன். என் இதயம் கனக்கிறது. வலிக்கிறது. என்னால் இதை ஏற்க முடியவில்லை. அன்பு நண்பரை இழந்து விட்டேன். கே.வி ஒரு அற்புதமான ஒளிப்பதிவாளர், அட்டகாசமான இயக்குநர். இந்த இழப்பை ஈடு செய்யவே முடியாது. உங்கள் இழப்பை உணர்வேன் அன்பு நண்பா. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்”.

இவ்வாறு ஷங்கர் ட்வீட் செய்துள்ளார்.

You may have missed