ஸ்டாலினின் உத்தரவுக்கு பாராட்டுக்கள் – இயக்குநர் ஷங்கர் ட்வீட்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. இதனையடுத்து மு.க.ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராக பதவியேற்றார். கொரோனா தொற்று காரணமாக இந்த பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் எளிமையாக நடந்து முடிந்தது. அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வரைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“பதவியேற்றுக் கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். அரசாங்க உத்தரவுகளை, குறிப்பாகத் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சைக்குத் தமிழக அரசின் காப்பீடும், பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்கிற அறிவிப்பையும் நான் பாராட்டுகிறேன்”.

இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்.

You may have missed