போலீசுக்கு துப்பு கொடுத்த வாலிபர் உள்ளிட்ட 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 2 ரவுடிகள் கைது

சென்னை, திருவொற்றியூர் பகுதியில், போலீசுக்கு துப்பு கொடுத்ததாக கூறி வாலிபர் உள்ளிட்ட இரண்டு பேரை அரிவாளில் வெட்டிய இரண்டு ரவுடிகளை கைது செய்தனர்.

சென்னை, திருவொற்றியூர், பட்டினத்தாா் கோயில் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (32). இவரின் கூட்டாளிகள் இரண்டு கொலை வழக்கில் தொடர்புடைய பொன்னேரி, லட்சுமியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முனுசாமி (29), திருவொற்றியூர், துலுக்காணம் தெருவை சேர்ந்த ஒரு கொலை வழக்கு உள்ள விஜி (எ) விஜியகுமார் (28), வினோத் (எ) பூனை வினோத் ஆகியோர் திருவொற்றியூர் பகுதியில் ஒன்றாக மது அருந்தினர். அப்போது முனுசாமி அவனின் கூட்டாளிகள் அஜித்குமாரிடன் போலீசுக்கு எங்களை பற்றி துப்பு கொடுப்பாயா என கேட்டு அரிவாளால் தலையில் வெட்டினர். தடுக்க வந்த சுரேந்திரனையும் காதில் வெட்டினர். பின்னர் அவர்கள் தப்பிவிட்டனர். இது குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முனுசாமி, விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர். பூனை வினோத்தை தேடி வருகின்றனர். காயம் அடைந்த அஜித்குமார், சுரேந்திரன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.