சூர்யா படத்தின் காட்சி ரத்து: தியேட்டர் முன்பு போலீசார்

தர்மபுரி மாவட்டத்தில், சூர்யா படத்தின் காட்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. தியேட்டர் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நின்றனர்.

தர்மபுரி மாவட்டம், டிஎன்சி தியேட்டரில், சூர்யா நடித்த எதற்கு துணிந்தவன் படம் வெளியாக இருந்தது. காலை காட்சி திரையிட, ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

சூர்யா நடித்த திரைப்படத்தை தியேட்டர்களில் திரையிட கூடாது என பாமகவினர் அரூர் போலீசில் புகார் கொடுத்து இருந்தனர். டி.என்.சி தியேட்டர் முன்பு காலை காட்சி பார்க்க சூர்யா ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

ஆனால், திடீரென காலை காட்சி ரத்து என அறிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, இதையடுத்து. தியேட்டர் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தர்மபுரியில், இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டன.