இரண்டாம் நாள் விசாரணையில் மேலும் ஒருவன் கைதானான், அடுத்து கொள்ளை கும்பல் தலைவன் தான்

ஏடிஎம் கொள்ளை வழக்கில் முதலில் பிடிப்பட்ட நபரிடம் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரித்த இரண்டாம் நாளில், மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அடுத்து கொள்ளை கும்பல் தலைவனை கைது செய்வோம் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

சென்னையில், எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் மையங்களை குறி வைத்து அரியானா கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி வந்தது. நூதன முறையில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் ரூபாய் ஒரு கோடி வரைக்கும் சுருட்டப்பட்டன. வேளச்சேரி, தரமணி, வளசரவாக்கம், வடபழனி, கீழ்ப்பாக்கம், கோட்டூர்புரம் உள்ளிட்ட ஏடிஎம் டெபாசிட் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக வங்கி நிர்வாகி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. எந்தந்த டெபாசிட் மையங்களில் பணம் கொள்ளைப் போனதோ அங்குள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த்னர். துணை கமிஷ்னர் அரிகரன் தலைமையில் கடந்த 23ம் தேதி அன்று அரியானாவில் வைத்து ஏடிஎம் கொள்ளையன் அமிர் அர்ஸ் கைது செய்யப்பட்டான். நேற்று அவனை சென்னை கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நேற்றே அமிர் அர்சை 5 நாள் காவலில் எடுத்தனர். இன்று இரண்டாம் நாள் விசாரணையில் கூட்டாளி வீரேந்தர் அரியானாவில் கைது செய்யப்பட்டான். அவனை சென்னை அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கொள்ளை கும்பல் தலைவன் சதக்கத்துல்லாவை கைது செய்ய சிபிசிஐடி நெருங்கியுள்ளது. தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ள சதக்கத்துல்லா வங்கியில் வேலை பார்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஆட்களிடம் பயிற்சி பெற்று தான் இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.