பைக் ஓட்ட ரூ ஒரு லட்சம் கொடுத்ததால் சென்னை வந்தேன் போலீசில் வீரேந்தேர் வாக்குமூலம்

அரியானாவில் பிளம்பராக வேலை பார்த்த எனக்கு பைக் ஓட்ட ரூ. ஒரு லட்சம் கொடுத்ததால் சென்னைக்கு வந்தேன் என போலீசில் வீரேந்தேர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

சென்னையில், ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களில் நூதன முறையில் பல லட்சம் சுருட்டிய அரியானா கும்பலை பிடிக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டன. முதல் கட்டமாக டெல்லியில் வைத்து அமீர் அர்ஸ் என்பவனை கைது செய்து, சென்னை கொண்டு வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் டெல்லியில், வீரேந்தேர் என்பவனை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர். சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்ட அவரை தரமணி போலீசார் நான்கு நாட்கள் விசாரணைக்கு எடுத்தனர். அதில் நான் பிளம்பராக வேலை பார்த்தேன் பைக் ஓட்டுவதற்கு ரூ. ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தார்கள். கொள்ளையடிக்கும் அமீர் அர்சை, நான் பைக்கில் அழைத்து செல்வேன், 7ம் வகுப்பு வரையில் படித்துள்ளேன், ஏடிஎம் தொழில் நுட்பம் தெரியாது என வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.