பரமக்குடியில் சசிகலா ஆதரவாளர்ரின் கார் எரிக்கப்பட்டதால் பரபரப்பு; பெட்ரோல் குண்டுகள் வீசியது யார்?

பரமக்குடியில், சசிகலா ஆதரவாளரின் கார் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, பெட்ரோல் குண்டுகளை வீசியது யார் என குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, மேல் காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் வின்சென்ட் ராஜா. இவர் அதிமுகவில், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக இருந்தார். சில நாட்களுக்கு முன்னர் வின்சென்ட் ராஜா, சசிகலாவிடம் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து அதிமுகவில் இருந்து வின்சென்ட் ராஜா நீக்கப்பட்டார்.  இந்த நிலையில் வின்சென்ட் ராஜா, தன்னுடைய நிறுவனத்தில் இருந்த போது அவரின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அவர் வந்து பார்த்த போது பெட்ரோல் குண்டு வீசி கார் எரிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து நாசமாயின. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.