புகார் கொடுத்து 3 மாதம் ஆனது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிளஸ் டூ மாணவி உடல் மீட்பு

சேலம் மாவட்டத்தில், மூன்று மாதம் காணாமல் போன பிளஸ் டூ மாணவி, தலை துண்டிக்கப்பட்ட நிலையில், உடல் மீட்கப்பட்டன. இதனால், உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

சேலம் மாவட்டம் மின்னாம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் வனிதா. இவரின் மகள் தித்தி மிலா. இவர், பிளஸ் டூ முடித்து வீட்டில் இருந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம்  மூன்றாம் தேதி தித்தி மிலா காணாமல் போனார்.

அவரை தேடி கண்டுபிடிக்கும் படி, காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்திருந்தனர்.போளீசாரும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், கோவிந்தராஜ் என்பவரின் தோட்டத்து கிணற்றில், தித்தி மிலா உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன.

அவரின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது, போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தலை எங்கே என போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், காணாமல் போகி, மூன்று மாதம் ஆன நிலையில், கிணற்றில் தித்தி மிலா பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பகுதியை சேர்ந்த நான்கு பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உறவினர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டன.