சூட்கேசில் உடலை வைத்தனர் ப்யூட்டி பார்லர் பெண்ணை கொன்றது யார்?

சேலத்தில், ப்யூட்டி பார்லர் பெண்ணை கொன்று சூட்கேசில் உடலை வைத்து தப்பிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை காதலனிடம் விசாரணை நடக்கிறது.

சேலம், வின் சென்ப் பகுதியில் நடேசன் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகளை ப்யூட்டி பார்லர் நடத்தி வந்த தேஜ்மண்டல் என்பவர் தங்கியிருந்தார். அழாகாபுரம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் அவர் ப்யூட்டி பார்லர், மசாஜ் சென்டர் நடத்தி வந்தார்.


கர்நாடக மாநிலம், பெங்களூர் சதாம் உசேன் என்பவருடன் தான் தேஜ்மண்டல், சேலம் வந்தார். பின்னர், சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்ததாக சதாம் உசேன் சென்று விட்டார். இந்த நிலையில், நேற்று மாலை தேஜ்மண்டல் போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.


நடேசனுக்கு போன் செய்த சதாம் உசேன், மனைவி தேஜ்மண்டல் இருக்கின்றாரா என பார்க்க சொன்னார். ஆனால், நடேசன் சென்ற போது வீடு உள் பக்கம் பூட்டப்பட்டிருந்தது. துர்நாற்றமும் வீசியது, தகவலின் பேரில், அஸ்தம்பட்டி போலீசார் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்தனர். அங்கு, தேஜ்மண்டலை காணவில்லை.

பரண் மேல் இருந்த சூட்கேசில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில், துர்நாற்றம் வீசியது. போலீசார், சூட்கேசை கைப்பற்றி பார்த்தபோது, தேஜ்மண்டல் கொல்லப்பட்டு, அவரை சுருட்டி உடலை அடைத்து வைத்திருந்தனர். தேஜ்மண்டலின் உடலை கைப்பற்றி விசாரித்ததில், அவரை கொன்றது யார் என தெரியவில்லை.

சதாம் உசேன் கணவர் இல்லை காதலன் என தெரிந்து, அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், போனில் பேசுவோம் 5 நாட்களாக போன் எடுக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும், தேஜ்மண்டல் வீட்டருகே தங்கியிருந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடி வருகின்றனர். ப்யூட்டி பார்லர், மசாஜ் சென்டர் பேரில் விபச்சாரம் தொழில் நடந்து, அதன் மூலம் வந்த பிரச்சினையில், தேஜ் மண்டல் கொல்லப்பட்டாரா என விசாரணை நடந்து வருகிறது.