சாய்னா நேவாலுக்கு மீண்டும் கொரோனா


இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் 2-வது முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதி்க்கப்பட்டுள்ளார்.

பாங்காக்கில் தாய்லாந்து ஓபன் தொடருக்காக இந்திய பாட்மிண்டன் அணியினர் சென்றுள்ளனர். இதில் திங்கள்கிழமை இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் சாய்னா நேவால், பிரணாய் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் 10 நாட்கள் பாங்காக் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

இருவருடனும் நெருக்கமாக இருந்த அனுராக் காஷ்யப்பும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று இந்திய பாண்மின்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மூன்றுபேரும் தாய்லாந்தில் நடக்கும் பாட்மிண்டன் போட்டிகளில் விளையாடமாட்டார்கள். கடந்த மாதம் சாய்னா, பிரணாய், காஷ்யப், குருசாய்தத், பிரணவ் சோப்ரா ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சையில் இருந்து குணமடைந்தனர்.

பாங்காக் புறப்படும் முன் இவர்களுக்கு நடத்தப்பட்டகரோனா பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்ததையடுத்து, புறப்பட்டுச்சென்றனர். இப்போது மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.