மே மாதத்துக்குள் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.78 ஆக வீழலாம்: காரணம் என்ன?

இந்த மாதத்துக்குள் (மே மாதம்) டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 78 ரூபாயாக வீழ்ச்சி அடையலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

ஏற்கெனவே வரலாற்றில் இதுவரைஇல்லாத வகையில் ரூபாய் மதிப்பு நேற்று ரூ.77.46 ஆக வீழ்ச்சி அடைந்த நிலையில் இந்த அதிர்ச்சியும் இந்த மாதத்துக்குள் வர இருக்கிறது.

பிஸ்னஸ் ஸ்டார்டர் நாளேடு நடத்திய சர்வேயில், டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு கடும் நெருக்கடியைச்சந்தித்து வருவதால், இந்த மாத இறுதிக்குள் 78 ரூபாயாகச் சரியும் என்று கூறப்பட்டுள்ளது.

மெக்லே பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் இம்ரான் காசி கூறுகையில் “அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிக்க அதிகரி்க்க வளரும் சந்தையைக் கொண்ட இந்தியாவின் ரூபாய் மதிப்புக்கு பெரும் நெருக்கடி உருவாகும்.

இப்போது இருக்கும் நிலையைவிட இன்னும் மோசமாக வீழ்ச்சி அடையும்” எனத் தெரிவித்தார். 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64200 பில்லியன் டாலரிருந்து 45 பில்லியனாகக் குறைந்தது.

அப்போது ரிசர்வ் வங்கி சந்தையில் தலையிட்டு டாலரை விற்று ரூபாய் மதிப்பை சரியாமல் பார்த்துக் கொண்டது. ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை அந்நியச் செலாவணி கையிருப்பு 600 பில்லியனாக வைத்திருக்க வேண்டும் என்று நம்புகிறது.

ஆனால், நேற்று கிடைத்த புள்ளிவிவரங்கள்படி, கடந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 598 பில்லியனாகக் குறைந்துவிட்டது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது, ஆசிய நாடுகளின் கரன்ஸுகளுக்கு நெருக்கடி அதிகரிப்பது, இறக்குமதி அதிகரிப்பது போன்றவை இந்தியா வசம் இருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பைக் குறைத்துவரும்.

ஆனால், பொருளாதார வல்லுநர்கள் கருத்துப்படி அடுத்த ஓர் ஆண்டு இறக்குமதிக்கான அந்நியச் செலாவணி கையிருப்பு இந்தியாவிடம் இருக்கிறது.

அதேசமயம், டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் ரிசர்வ் வங்கி தலையிட வேண்டும். மே மாத இறுதிக்குள் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.78 ஆகவும் ஜூன் மாத இறுதியில் 79 ரூபாயாக சரியலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

நடப்பு நிதியாண்டு தொடங்கியதிலிருந்து டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 2.16சதவீதம் சரிந்துள்ளது. கடந்த 2021-22ம் ஆண்டில் ரூபாயின் மதிப்பு 4 சதவீத்துக்கும் அதிகமாகச் சரிந்தது
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீட்டை தங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்வது அதிகரித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் இதுவரை 580 கோடி டாலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது. ஆதலால், ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலர்களை விற்பனை செய்தால்தான் ரூபாயி மதிப்பு தேய்வதை தடுக்க முடியும், 78 ரூபாய்க்கு சரியாமல் தடுக்க முடியும் என்று பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. ஆனால் பேரல் 113 டாலர்களாக உயர்ந்துவிட்டது, ரூபாய் மதிப்புக்கு மேலும் அழுதத்தை அதிகரிக்கும்.

அதுமட்டுமல்லாமல் ரூபாய் மதிப்பு குறைவு என்பது, வர்த்தகப் பற்றாக்குறை இடைவெளியே அதிகரிக்கும்.
ரூபாய் மதிப்பு சரிய 3 காரணங்கள்.

  1. அமெரிக்காவில் பெடரல் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது. இதுவரை 75 புள்ளிகள் வட்டியை உயர்த்தியிருக்கிறது. இதனால் அமெரி்க்கச் சந்தை சாதகமாக மாறிவருவதை அறிந்த அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச்ச ந்தையிலிருந்து முதலீட்டை திரும்பப் பெற்று தங்கள் நாட்டில் முதலீடு செய்வதால் செலாவணி வெளியேற்றம் அதிகரிக்கிறது. இதனால் முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்றார்போல் டாலர்களை வழங்க வேண்டும் என்பதால்ரூபாய் மதிப்பு நெருக்கடிக்குள்ளாகிறது.
  2. உள்நாட்டில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை மீறி செல்கிறது. 6சதவீதத்துக்குள் இருக்க வேண்டிய பணவீக்கம் தற்போது 7 சதவீதத்தைக் கடந்து செல்கிறது. இதனால் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதத்தை தொடர்ந்து உயர்த்தும் சூழல் இருக்கிறது. இதனால் பொருளதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்பதாலும் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுகிறார்கள்.
  3. அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியச் சந்தையிலிருந்து முதலீட்டை திரும்பப் பெறுவதால் டாலரின் தேவை அதிகரிக்கும். இறக்குமதியாளர்களுக்கும் டாலர் தேவை, அந்நிய முதலீட்டாளர்களுக்கும் முதலீட்டை திரும்பத் தர வேண்டும் என்பதால், ரூபாய் மதிப்புக்கு நெருக்கடி ஏற்பட்டு சரிகிறது.