ஓடும் வேன் தீப்பிடித்ததால் பரபரப்பு; கைக்குழந்தையுடன் தப்பினர்

சென்னை, ஆவடி பகுதியில் ஓடும் வேன் தீப்பிடித்து எரிந்ததில், கைக்குழந்தையுடன், இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிர் தப்பினர்.

சென்னை, ஆவடி, கன்னியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(28). இவர், டாடா மேஜின் வேன் ஓட்டி வருகிறார்.

இன்று, அவர் இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர், கைக்குழந்தை ஒன்று என வேனில் ஏற்றுக்கொண்டு, காஞ்சிபுரம் செல்ல புறப்பட்டார்.

சென்னை திருப்பதி நெடுஞ்சாலை , ஜெயா கல்லூரி அருகில் வேன் சென்றது. அப்போது, வேனில் இருந்து கரும்புகை கிளம்பியது.

சிறிது நேரத்தில், தீ மளமளவென  எரியத்தொடங்கியது. இதை பார்த்த டிரைவர் விஜயகுமார், வேனில் இருந்தவர்களை உடனடியாக கீழே இறக்கிவிட்டு, அவரும் தப்பித்தார்.

தீயணைப்பு அங்கு வருவதற்கு தாமதமானதால், அனிருந்த மக்கள் ஒன்று கூடி, தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.