லாட்டரி சீட்டில் ரூ.62 லட்சம் இழப்பு; நூல் ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை..!

ஈரோடு மாவட்டம், எல்லப்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரியில், ரூ.62 லட்சத்தை இழந்த நூல் ஏஜென்ட் ஒருவர், வீடியோ காலில் பதிவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், எல்லப்பாளையம் , முல்லை நகரை சேர்ந்தவர் ராதாக்கிருஷ்ணன்(54). இவரின் மனைவி மாலதி (62). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன.

ராதாக்கிருஷ்ணன் முதலில்  தறித்தொழில் நடத்தினார், அதில், நஷ்டம் ஏற்படவே. நூல் ஏஜென்ட் வேலை பார்த்தார். இவர், வீட்டுக்கு தெரியாமல், ஆன்லைன் லாட்டரியில் பணத்தை இழந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், ரூ.62 லட்சம் வரை இழந்த ராதாக்கிருஷ்ணன், வேறு வழியில்லாமல், வீடியோ காலில் பதிவிட்டு,தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

அந்த வீடியோ காலில், நான் ஆன்லைன் லாட்டரிக்கு அடிமையாகி, ரூ.62 லட்சம் வரை இழந்து விட்டேன். அதனால், வேறு வழியில்லாமல், நான் தூக்கிட்டு சாகிறேன் என பதிவாகி இருந்தது.

இது தொடர்பாக, வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.