என்கவுன்டரில் இறந்த ரவுடியின் மனைவியை வெட்டிக் கொன்றனர்; கடலூரில் நள்ளிரவில் பரபரப்பு

கடலூர், குப்பன் குளம் பகுதியில், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடியின் மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், குப்பன் குளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், இவர் பிரபல ரவுடி. கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த நிலையில் போலீஸ் என் கவுன்டரில், கிருஷ்ணனை சுட்டுக் கொன்றனர். இவரின் மனைவி காந்திமதி ஆவார். இவர் நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

கம்மியம்பேட்டை, சீனிவாசன் நகர் அருகே வந்த போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்து வழிப்பறியில் ஈடுபட்டனர். அவர்கள் காந்திமதியிடம் தகராறில் ஈடுபட்டு பின்னர், அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டினர். பின்னர் அந்த கும்பல் தப்பிவிட்டனர். படுகாயமடைந்த காந்திமதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடியின் மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed