ஏரியாவில் தவ்லத் காட்டியதால் ரவுடியை கொலை செய்தோம்; கைதான கும்பல் வாக்குமூலம்..!

எங்கள் ஏரியாவுக்கு வந்து தவ்லத் காட்டியதால், ரவுடியை வெட்டிக்கொன்றோம் என கைதான கும்பல் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளது.

சென்னை, ஆயிரம் விளக்கு, சுதந்திரா நகர், ஹவுசிங் போர்டு, பி பிளாக்கை சேர்ந்தவர் மொக்க (என்கிற) மோகன்(22). இவர்,அவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வந்தார்.

ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில், கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன. இவருக்கும், புதுப்பேட்டை புறா என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.

மோகன்  அவரின் நண்பர்கள் , நேற்று முன் தினம் இரவு, புதுப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். பின்னர், அவர், ஆயிரம் விளக்கு பகுதிக்கு வந்தார்.

அங்கு, புதுப்பேட்டையில் இருந்து ஒரு கும்பல் மோகன், அவரின் நண்பர் ஷாம் ஆகியோரை தேடி வந்தது தெரியவந்தது.  

என் ஏரியாவுக்கு வந்து, என்ணை தேடியவர்களை, அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று மிரட்ட வேண்டும் என மோகன், இரண்டு இரு சக்கர வாகனத்தில், நண்பர்கள் சந்தோஷ், அருணாச்சலம் (எ) ஷாம், சுனில் குமார், மனோஜ் ஆகியோருடன் நள்ளிரவில் புதுப்பேட்டைக்கு சென்றார்.

அங்குள்ள பம்பிங் ஸ்டேஷன் பகுதிக்கு நண்பர்களுடன்  சென்ற மோகன், அங்கு நின்றிருந்த எட்டுப்பேர் கும்பலிடம் யாருடா என் ஏரியாவுக்கு வந்தது. அவங்களுக்கு தில் இருந்தா வரச்சொல்லு பார்க்கலாம் என மிரட்டினார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு மோகனை வெட்டியது.

இதை பார்த்ததும், மோகனுடன் வந்த நண்பர்கள் தப்பித்து சென்றனர். மோகன் மட்டும் தனியாக சிக்கினார்.

புதுப்பேட்டை, ஆய்யசாமி தெரு வழியாக மோகன் ஓட்டம் பிடித்தார்.ஆனால், அந்த கும்பல், மோகனை விடாமல் விரட்டி சென்று சரமாரியக வெட்டிக்கொன்று, அந்த கும்பல் தப்பியது.

தகவல் கிடைத்து, எழும்பூர் போலீசார் விரைந்து வந்து, மோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், கொல்லப்பட்ட ஆயிரம் விளக்கு மோகனுக்கும், புதுப்பேட்டை புறா என்பவருக்கும் யார் ஏரியா தவுலத் என்ற யூகோ இருந்தது.
இந்த பிரச்சினையில் தான் மோகன் கொல்லப்பட்டது தெரியவந்தது.  

இந்த வழக்கில், தனிப்படையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து, கொலையில் தொடர்புடைய, அய்யாசாமி தெருவை சேர்ந்த விகரம்(20) விக்னேஷ் (21), யூடியூப் வெங்கடேசன் (20), வசீகரன் (20) மற்றும் சிறுவன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

ஏரியாவுக்குள் நுழைந்து மிரட்டியதால், மொக்க மோகனை கொன்றோம் என வாக்குமூலம் கொடுத்தனர்.