பிணை பத்திரம் எழுதிக்கொடுத்தும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரவுடிக்கு, 236 நாட்கள் சிறை

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் உறுதி மொழி பிணை பத்திரம் எழுதிக்கொடுத்தும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு, திருந்தாத ரவுடிக்கு 236 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சென்னை, துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் சசிக்குமார்(எ) புறா(29). இவர் மீது, எழும்பூர் காவல் நிலையத்தில், வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட 14 வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்.

கடந்த ஜனவரி மாதம் 26ம்தேதி அன்று, திருவல்லிக்கேணி துணை கமிஷனரிடம், சசிகுமார், திருந்தி வாழப்போவதாக கூறி, ஒரு வருடத்திற்கு, நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதிக்கொடுத்தார்.

செனாய் நகர், மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த மாதம் 30ம் தேதி அன்று, 13 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சசிகுமாரை அமைந்தக்கரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் திருந்தி வாழ்வதாக கூறி, மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்ட சசிகுமாருக்கு, பிணையில் வர முடியாத அளவிற்கு, 236 நாட்கள் சிறை தண்டனை வழங்கி, துணை கமிஷனர் உத்தரவிட்டார்.