இங்கு வந்தால் செல்போன் பறிக்கலாம்; சிறுமியின் இன்ஸ்டாகிராம் சிக்னல், 16 இடங்களில் வழிப்பறி; 4 பேர் கும்பல் கைது

இங்கு ஆள் நடமாட்டம் இல்லை. செல்போன் பறிக்கலாம் என சிறுமியின் இன்ஸ்டாகிராம் சிக்னல் வைத்து, 16 இடங்களில், வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்தனர்.
சென்னை, கோபாலபுரம், டி.ஏ.வி பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தனியாக நடந்து செல்வோரிடம் செல்போன் பறிக்கப்பட்டது.
ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு என 16 இடங்களில் வழிப்பறி சம்பவம் நடந்தது.
இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தி, திருவல்லிக்கேணி, ஆதம்மார்க்கெட்டில் லாட்ஜில் பதுங்கியிருந்த நான்கு பேர் கும்பலை பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள்,தேனாம்பேட்டை, எஸ்.எஸ்.புரம் எம்.கே.ராதா நகரை சேர்ந்தவர் விவேக் (எ) குள்ளா (26) காமராஜர் சாலை, பார்த்தசாரதி வளைவு பகுதியை சேர்ந்த ஜெகன்(25) சிதம்பரம், கோவிந்தசாமி தெருவை சேர்ந்த ஜெகதீசன்(25) தூத்துக்குடி, சண்முகபுரத்தை சேர்ந்த சரவணபெருமாள் (19) என தெரியவந்தது. அவர்களுடன் இருந்த 17 வயது சிறுமி ஒருவரும் சிக்கினார்.

விசாரணையில், இவர்களுடன் கூட்டு சேர்ந்த சிறுமி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நோட்டமிட்டு இந்த ஏரியாவில் ஆள் நடமாட்டம் இல்லை, தனியாக பெண் ஒருவர் செல்கிறார், வந்தால் செல்போன் பறிக்கலாம் என சங்கேத வார்த்தைகளை பதிவிடுவாராம்.
அதை வைத்து, பைக்கில் வந்து, இவர்கள் செல்போன் பறிப்பது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து, 7 செல்போன்கள், ஆப்பிள் ஐ பேட், 15 ஆயிரம் ரூபாய், இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.