சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை முயற்சி பால்வண்டி வந்ததும் திருடர்கள் ஓட்டம்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில், சூப்பர் மார்க்கெட்டில் ஷட்டரை உடைத்து, கொள்ளையடிக்க முயற்சித்தபோது, பால் வண்டி வந்ததும், திருடர்கள் ஓட்டம் பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், ரமணா நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன், இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

இன்று அதிகாலை, இவரது கடைக்கு மர்ம நபர்கள் இருவர் வந்தனர்.
கடையின் ஷட்டர் பூட்டு உடைத்து, கொள்ளை அடிக்க முயற்சித்தனர்.

அப்போது, அங்கு பால்வண்டி வந்ததும், திருடர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து சுந்தர ராஜனுக்கு தகவல் கிடைத்து, அங்கு வந்தார்.

புகாரின் பேரில், மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், மீஞ்சூர், மின்வாரிய குடியிருப்பில் வசித்து வரும் அதிகாரி ஒருவரின் வீட்டில் 110 சவரன் நகைகள்–பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு சம்பவத்தில், ஒரே நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.