ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 34 சவரன், 18 கேரட் வைரம் கொள்ளை

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில், ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 34 சவரன் நகை, 18 கேரட் வைரம், வெள்ளி என கொள்ளையடிக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை, ஆறாவயல் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சப்பன், இவர் பல்கலை கழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். இங்குள்ள வீட்டிற்கு விடுமுறை காலங்களில் பிச்சப்பன் வந்து தங்குவார். மதுரையில் மனைவி சொர்ணத்துடன் வசித்து வரும் இவர் குடும்ப நிகழ்ச்சிக்காக சிவகங்கை வீட்டிற்கு கடந்த 25ம் தேதி வந்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து கிளம்பி விட்டார்.

இந்த நிலையில், இரண்டாம் மகன் ராமசாமி, அவரின் மனைவி விசாலாட்சி, இந்த வீட்டிற்கு வந்த போது அதிர்ச்சி அடைந்தனர். முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. நான்கு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 34 சவரன் நகை, 18 கேரட் வைரம், 40 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தேவக்கோட்டை டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may have missed