திமுகவினர் அரிவாளை காட்டி மிரட்டி, அதிமுக பெண் பூத் ஏஜெண்டுகளை பூட்டி வைத்ததால், சாலை மறியல்..!

சென்னை, காசிமேடு பகுதியில் வாக்குச்சாவடியை கைப்பற்றி, திமுகவினர் அரிவாளை காட்டி மிரட்டி, அதிமுக பெண் பூத் ஏஜெண்டுகளை பூட்டி வைத்து, கள்ளஓட்டு போட்டதால், சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

சென்னை, காசிமேடு, சூரிய நாராயணன் தெருவில் 43 வார்டுக்கான முருக தனுஷ்கோடி பள்ளியில் வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் பவித்ரா, அதிமுக சார்பில் தமிழரசி உள்ளிட்டோர்   போட்டியிடுகின்றனர். 

இந்த நிலையில், காலையில் இருந்து மாலை வரை வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. மாலை 5மணியளவில், ஆர்.கே,.நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ எபினேசர் தலைமைய்ல், ஒரு கும்பல் வாக்குச்சாவடிக்குள் நுழைந்தது. அரிவாளை காண்பித்து, அதிமுகவை சேர்ந்த பெண் பூத் ஏஜெண்டுகளை மிரட்டி, அவர்கள் கையில் வைத்திருந்த நோட்டு, புத்தகத்தை பிடுங்கி ஏறிந்தனர்.

பின்னர், அவர்களை ஒரு அறையில் பூட்டி வைத்ததாக தெரிகிறது, பின்னர், கள்ளஓட்டு போட முயற்சித்தனர். இதை அறிந்து, சூரிய நாராயணன் தெருவில் அதிமுகவினர் மற்றும் அதன் வேட்பாளர் தமிரசி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் உஷாராணி, பாஜக வேட்பாளர் நதியா, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரஜாகத்தில் ஈடுபடும் திமுகவினரை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். அவர்களிடத்தில், துணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான் தலைமையிலான போலீசார் சமரச பேச்சில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டன.