பச்சை நிறமான கடல் பகுதி: செத்து இறந்து கிடந்த மீன்கள்..!

ராமநாதபுரம் கடல் பகுதி முழுவதும் பச்சை நிறமாக மாறியதில், மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் அதிர்ச்சியடைந்தனர்.

ராமநாதபுரம், கீழக்கரை சேதுக்கரை முதல் வேதாளை வரையிலான கடல் பகுதி, திடீரென பச்சை நிறமாக மாறியது, இதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மீன்களும் செத்து வரிசையாக கரை ஒதுங்குவதால, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகின்றனர்.

தகவல் கிடைத்து, மீன் வளத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் சேக் மன்சூர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து அந்து, கடல் பகுதியில் ஆய்வு நடத்தினர்.

சுகாதார துறை அதிகாரிகள் மூலம் துப்புரவு தொழிலாளிகளை கொண்டு, செத்து கிடந்த மீன்கள் அப்புறப்படுத்தினர். கடல் பச்சை நிறம் ஆனதால் அச்சப்பட தேவையில்ல்லை, நடுக்கடலில் இருக்கும் கப்பல்களில் இருந்து, ரசாயன கலவை ஏதாவது கசிந்துள்ளதா என ஆய்வு நடத்துகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.