இன்று புழலில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்: பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டன

சிகிச்சையில் இருந்த பேரளிவாளனை இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவருக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டன.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 30 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன் ஆவார்.

அவருடைய தாயார் அற்புதம்மாள், பேரறிவாளனுக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை பெறவேண்டும் என்று கூறி பேரறிவாளனுக்கு பரோளில் விடுப்பு வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை வைத்திருந்தார்.


அதனைத் தொடர்ந்து, மே 28ம் தேதி அன்று, ஒரு மாதம் பரோலில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தொடர்ந்து , கிருஷ்ணகிரி வேலூர், விழுப்புரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.


முதலில் ஒரு மாத பரோலில் வந்த பேரறிவாளனுக்கு , சிகிச்சைக்காக அடுத்தடுத்து 4 முறை பரோல் நீட்டிக்கப்பட்டது. 150 நாட்கள் முடிவுற்ற நிலையில் இன்று மீண்டும் ஆம்பூர் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில், இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில். மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.