நள்ளிரவிலும் அமைச்சரின் மகத்தான பணி, கோயம்பேட்டில் நள்ளிரவில் தவித்த 20 பயணிகள், பேருந்து மூலம் ஊட்டி சென்றனர்

சென்னை, கோயம்பேட்டில் நள்ளிரவில் தவித்த 20 பயணிகளை பேருந்து மூலம் அவர்களின் சொந்த ஊரான ஊட்டி சென்றனர். நள்ளிரவிலும் அமைச்சர் ராஜக்கண்ணப்பனின் மகத்தான பணியை அனைவரும் பாராட்டினர்.  

 தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைய, வருகின்ற திங்கள் கிழமை முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்று பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயங்காது. இதனால் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களை சேர்ந்தோர் கோயம்பேட்டில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு திரும்பினர். ஆனால் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் 20 பயணிகள் குழந்தைகளுடன் ஊட்டி செல்ல முடியாமல் தவித்தனர். நான்கு மணி நேரம் ஆகியும் ஊட்டி செல்லும் பேருந்துகள் வரவில்லை. இந்த  நிலையில், பெண் பயணி ஒருவர் புத்திசாலிதனத்துடன் அமைச்சர்களின் வாட்சப் செல்போன் நம்பர்களை தனது கூகுள் ஆப்பில் தேடினார். அதில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வாட்சப் நம்பரை கண்டுபிடித்து. அதில் தகவலும் அனுப்பினார். மேலும் அவருக்கு போனும் செய்தார். நள்ளிரவு என்றும் பாராமல் அந்த அழைப்பை எடுத்து நான் ராஜக்கண்ணப்பன் பேசுகிறேன் என்றார். அந்த பெண் பயணி அங்குள்ள நிலைமையை விளக்கினார். அடுத்த நிமிடத்தில் போக்குவரத்து அதிகாரி ஒருவருக்கு போன் செய்த அமைச்சர் ராஜகண்ணப்பன், உடனடியாக ஊட்டிக்கு செல்லும் பேருந்தை ஏற்பாடும் செய்தார். உடனடியாக அந்த பெண் பயணி மீண்டும் ராஜகண்ணப்பனுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் அவர்கள் பத்திரமாக ஊட்டி சென்றனர். நள்ளிரவிலும் மக்களுக்காக பணி செய்த அமைச்சரின் மகத்தான சேவையை அனைவரும் பாராட்டினார்.

1 thought on “நள்ளிரவிலும் அமைச்சரின் மகத்தான பணி, கோயம்பேட்டில் நள்ளிரவில் தவித்த 20 பயணிகள், பேருந்து மூலம் ஊட்டி சென்றனர்

  1. ஐயா நீங்கள் செய்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 20 பயனிகள் பேருந்து இல்லாமல் கஷ்டம் படும் பொழுதும் இரவு நேர என்று கூட பார்க்காமல் மக்களுக்கு உதவி செய்ததற்காக நன்றி..!

Leave a Reply

Your email address will not be published.