லாட்ஜில் திடீர் சோதனை; ஆயுதங்களுடன் 14 பேர் கைது, கொலை சதி திட்டம் முறியடிப்பு

சென்னை, திருவல்லிக்கேணியில் கொலை செய்ய சதி திட்டம் தீட்டி லாட்ஜில் பதுங்கியிருந்த 14 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில். பெரியமேடு. திருவல்லிக்கேணி, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் லாட்ஜிகள் ஏராளமாக உள்ளன. வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், போலீசார் இரவு நேரங்களில் திடீர் சோதனை நடத்துவது வழக்கம்.

அதன்பேரில், நேற்று விடியற்காலை திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் தலைமில் உதவி கமிஷனர் பாஸ்கர் கொண்ட தனிப்படையினர் திருவல்லிக்கேணி லாட்ஜ் ஒன்றில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு இரண்டு அறைகளில், 14 பேர் இருந்தனர். அவர்களை கைது செய்தனர். அறைகளில் பதுக்கி வைத்திருந்த கத்தி அரிவாள், கஞ்சா ஆகியவை இருந்ததை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரத்குமார் (24), பரத்குமார் (22), சாய்நாத் (19), டில்லிபாபபு (22), சங்கர்ராஜா(23) மற்றும் 9 சிறுவர்கள் என தெரிந்தது.

இதில், சாய்நாத், கல்லூரி மாணவர். 6 பள்ளியில் படிப்பவர்கள் என தெரிந்தது. டில்லி பாபு, ஆந்திராவில் சட்டக்கல்லூரியில் படிக்கிறார்.

போலீசார் நடத்திய் விசாரணையில் இவர்கள் கடந்த ஆண்டு நடந்த ஒரு கொலையிவ், தங்களின் எதிரியை தீர்த்துக்கட்ட, லாட்ஜில் பதுங்கி, சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. போலீசார் சரியான நேரத்தில் சதி திட்டத்தை முறியடித்தனர்.