மனைவியுடன் தகராறு சிறை காவலர் தூக்கிட்டு தற்கொலை..!

சென்னை, புழல் சிறைக்காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் இந்த விபரீத எடுத்தது தெரியவந்தது.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் மாரியப்பன், இவரின் காசிராமன்(29). கடந்த 2017ம் ஆண்டு, சிறைத்துறையில் காவலராக பணிக்கு சேர்ந்தார். புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணை கைதிகள் சிறையில், காசிராமன்  பணிபுரிந்து வந்தார்.

இதற்காக புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறைக் காவலர் குடியிருப்பில் காசிராமன், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் காசிராமனுக்கும், அவர் மனைவி சரண்யாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனால் காசிராமன் விரக்தியுடன் இருந்தார்.

 இதற்கிடையே காசிராமனுக்கும், சரண்யாவுக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த காசிராமன், தனது அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து, காசிராமன் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.