திருமணத்திற்கு முன்னரே திட்டம்; வாடகை தாய் மூலம் குழந்தை, நயன்தாரா வாழ்க்கையில் நடந்தது என்ன?

ஊரே பிரமிக்கும் வகையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் நடந்த நிலையில், குழந்தை பெற்றெடுப்பதில் வாடகை தாயை அணுகியது ஏன்? நயன்தாரா வாழ்க்கையல் நடந்தது என்ன என அவர்களின் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என பெயரெடுத்தவர் நடிகை நயன்தாரா. இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். கடந்த ஜூன் 9ம் தேதி ஊரே பிரமிக்கும் வகையில் திருமணம் முடித்தனர்.

திருமணமாகி நான்கே மாதங்களில், நயன் தாராவுக்கு இரட்டை குழந்தை என செய்தி பரவியது.

அதன் பிறகு தான், அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது தெரிந்தது. அதுவும் இப்போது, சர்ச்சையாகி சிக்கலாகி போனது.

பத்து மாதம் வரையில் பொறுக்க முடியாமல், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது, நயன் தாராவிற்கு என்ன பிரச்சினை உள்ளது.

குழந்தை பெற்றடுப்பதில்,உடல் ரீதியாக நயன் தாராவுக்கு பிரச்சினை இருந்துள்ளது.

திருமணம் செய்வதற்கு முன்னரே விக்னேஷ்சிவனுக்கு தெரிந்து, அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதெல்லாம் தெரியுமா?

நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு, வாடகை தாய், அதன் மூலம் குழந்தை பெறுவது, அதற்கான சட்டம் சொல்வது என்ன? செய்யக்கூடாது என்ன? என தெரியுமா என்று சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வாடகை தாய் சட்டத்தை மீறும் தம்பதிக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த விவகாரத்தில் மருத்துவர்கள், மருத்துவமனைகள் சட்டத்துக்கு புறம்பாக நடந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சட்டம் சொல்கிறது.

இந்த நிலையில், திருமணத்திற்கு முன்னரே, இருவரும் ஒரு பரஸ்பரம் முடிவெடுத்த பிறகே, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்திருந்த தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாராவால் தாயாக முடியாதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நயன் தாரா- விக்னேஷ் சிவன் மவுனம் கலைத்து உண்மையை உடைப்பார்களா?