பெட்ரோல் குண்டு வீச்சு நான்கு கார்கள் எரிந்து நாசம்

சென்னை, மேடவாக்கம் பகுதியில், தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில், நான்கு கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

சென்னை, மேடவாக்கம், விமலா நகர், 3வது பிரதான சாலையை சேர்ந்தவர் கவுதம். இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரின் வீட்டு வாசலில் சொகுசு கார் உள்ளிட்ட நான்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று அதிகாலையில் சத்தம் கேட்டு கவுதம் கீழே வந்தார். அப்போது கார்கள் தீப்பற்றி எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கவுதம், போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும், கார்கள் முற்றிலும் எரிந்தன. போலீஸ் விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். தொழில் போட்டி காரணமாக, இதை செய்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.