வெயில், மழையில் காயவிட்டு உணவு கொடுக்காமல் கொடூரம், வீட்டு நாயை காப்பாற்றிய ப்ளூ கிராஸ்

விருதுநகர் மாவட்டத்தில், வெயில், மழையில் காயவிட்டு உணவு கொடுக்காமல் பரமாரிக்காமல் கொடுமைபடுத்திய வீட்டு நாயை ப்ளூ கிராஸ் காப்பாற்றினார்.

விருதுநகர் மாவட்டம், லட்சுமி நகர், பாண்டியன் தெருவில் உள்ள ஒரு வீட்டில், செல்லப் பிராணியாக நாய் வளர்க்கப்பட்டன. ஆனால் அந்த நாயை சரிவர பராமரிக்காமல் வீட்டின் வெளியில் கட்டி வைத்தனர். மழையிலும், வெயிலிலும் காய்ந்தபடி அந்த நாய் இரவும், பகலும் தன்னை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என்றபடி குரைத்தது. உணவும் ஒரு வேளை தான் போடப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து ப்ளூ கிராசிற்கு தகவல் கிடைத்து நாயை காப்பாற்றி அவர்கள் எடுத்து சென்றனர். மேலும் நாயை பராமரிக்காமல் இருந்தவர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.