மாடு மேய்த்தபோது வழிப்பறி: மூதாட்டியின் செயின் பறிப்பு..! அடித்தும் உதைத்தனர்

பெரம்பலூர் மாவட்டத்தில், ஆலத்தூரில், மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, மூதாட்டியை சரமாரியாக தாக்கி, செயினை பறித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர், இழந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி, இவரின் மனைவி மணி (63). இவர் ஜமீன் பேரையூர் செல்லும் சாலையில், மாடுகளை மேய்துக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு பைக்கில் வந்த 3 பேர் மணியிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர், அவரின் நான்கு சவரன் செயினை பறித்தனர். அவர், தடுத்தபோது மணியை தாக்கி, அங்கிருந்து தப்பிவிட்டனர். இது தொடர்பாக, குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.