ஆரம்ப காலத்தில் 60 பைசாவுக்கு சிகிச்சை அளித்த மக்கள் மருத்துவர் பலி, கொரோனா இவரையும் விடவில்லை

சென்னை, வண்ணாரப்பேட்டையில், ஆரம்ப காலத்தில் 60 பைசாவுக்கு சிகிச்சை அளித்த மக்கள் மருத்துவர் கொரோனாவுக்கு பலியானார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கொரோனா தொற்று ஏற்பட்டு  மக்கள் மருத்துவர் என அழைக்கப்படும் பார்த்தசாரதி (84) என்பவர் உயிரிழந்துள்ளார். இவர், கடந்த 60 ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவம் பார்த்தார். ஆரம்பத்தில் 60 பைசாவுக்கு சிகிச்சை பார்த்து வந்தார். மருத்துவர் பார்த்தசாரதி தற்போது ரூ.50க்கு மருத்துவம் பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல நோயை குணப்படுத்தியவர் நோய்க்கு பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.