திங்கள் கிழமை முழு ஊரடங்கு, சென்னையில் இருந்து 1,33 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

தமிழகத்தில் நாளை திங்கள் கிழமை அன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சென்னையில் இருந்து 1,33 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

தமிழகத்தில் இருந்து வெளி மாவட்டங்களை சேர்ந்தோர் சென்னையில் அதிகம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் திங்கள் கிழமை அன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டன. அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும். பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள்ன. இதனால் பல கம்பெனிகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்படுகின்றனர். இதனால் சென்னையில் தங்கி வேலை பார்ப்போர், சொந்த ஊர் திரும்புகின்றனர். அதன்படி நேற்று முதல் இன்று காலை வரை சென்னையில் இருந்து 1,33 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். இதற்காக 3,325 பேருந்துகள் இயக்கப்பட்டன. பல பேர் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல 4,816 பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.