கிரிக்கெட்டின் புதிய விடியல்… நாடே பெருமைப்படுகிறது!- நடராஜனை புகழ்ந்து தள்ளிய பி.சி.ஸ்ரீராம்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மாபெரும் வெற்றி பெற்றது இந்திய அணி.

இந்திய அணியின் இந்த மாபெரும் சாதனையை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் ரஹானே, ரிஷப் பந்த், தமிழக வீரர் நடராஜன் உள்ளிட்டோரை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து வெற்றிக் கோப்பையுடன் திரும்பிய அவர்களுக்கு மும்பை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக வீரர் நடராஜனின் சொந்த ஊரான சின்னப்பம்பட்டியிலும் கிராம மக்கள் ஒன்று கூடி மேள தாளத்துடன் அவரை வரவேற்றனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்நிலையில், நடராஜனை ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில பாராட்டியுள்ளாது. அதில் அவர், ‘நாடே உங்களை நினைத்து பெருமைப்படுகிறது. நாம் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நானும் பெருமை கொள்கிறேன். இப்போதெல்லாம் நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. சமூக ஊடகங்களின் மூலம் உங்களை பார்த்து கிரிக்கெட்டில் புதிய் விடியல் தொடங்கியுள்ளது என்று எனக்கு தோன்றியது. கலக்குங்கள் நடராஜ்’ என்று பதிவிட்டுள்ளார்.