ஆண் நண்பர்களுடன் நெருக்கம் அவதூறு பரப்பியதாக பார்வதி நாயரின் புகாரில் வேலைக்காரர் மீது 3 பிரிவுகளில் வழக்கு!

ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்ததால் என் மீது பொய்வழக்கு கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பேட்டியளித்ததாக குற்றம் சாட்டி நடிகை பார்வதி நாயர் தந்த புகாரில், வீட்டு வேலைக்காரர் சுபாஷ் சந்திரபோஸ் மீது மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் வசிப்பவர் நடிகை பார்வதி நாயர், இவரது வீட்டு வேலைக்காரன் சுபாஷ் சந்திரபோஸ்,
கடந்த நவம்பர் மாதம், பார்வதி நாயர், நுங்க்ம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், தன் வீட்டில் இருந்த விலை மதிக்க கைக்கடிகாரங்கள், லேப் டாப் ஆகியவை திருடுப்போனதாகவும், அவற்றை வீட்டு வேலைக்காரன் சுபாஷ் சந்திரபோஸ் திருடியிருப்பதாக புகாரில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தன் மீது பொய்வழக்கு போட்டுள்ளதாகவும், போலீசார் ஒரு தலை பட்சமாக விசாரணை நடத்துவதாகவும், சுபாஷ் சந்திர போஸ், சமீபத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பார்வதி நாயர், சுபாஷ் சந்திர போஸ் தன்னை மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில், நுங்கம்பாக்கம் போலீசில் பார்வதி நாயர் மீண்டும் ஒரு புகார் அளித்தார்,

அந்த புகாரில், சமூக வலைத்தளங்களில், யூடியூப் சேனல்களில், சுபாஷ் சந்திரபோஸ் பேட்டி என்ற பெயரியில், என் கெரியரை பாழாக்கி வருகிறார்.

ஆண் நண்பர்களுடன் நான் நெருக்கமாக இருந்ததாகவும், அதை பார்த்து விட்டதால் தான் சுபார் சந்திர போஸ் மீது நான் பொய் புகார் தந்ததாகவும் கூறி வருகிறார்.

என் பெயருக்கு களங்கம் கற்பித்து, தன்னை மிரட்டி வரும் சுபாஷ் சந்திரபோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

இதையடுத்து, நுங்கம் பாக்கம் போலீசார், கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்ப சடத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்ணிற்கு களங்கம் பிறப்பிப்பது என மூன்று பிரிவுகளின் கீழ் சுபாஷ் சந்திர போஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஜித்தின் என்னை அறிந்தால், கமல்ஹாசனுடன் உத்தம வில்லன், உதயநிதி ஸ்டாலினின் நிமிர், விஜய் சேதுபதி உடன் சீதக்காதி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.