பிரெஞ்சு ஓபன்: டோமினிக் தீம் அதிர்ச்சித் தோல்வி: ஒசாகாவுக்கு அபராதம்

டோமினிக் தீம்

கிராண்ட்ஸ்லாம்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே நடப்பு யுஎஸ் ஓபன் சாம்பியனும் ஆஸ்திரியா வீரருமான டோமினிக் தீம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார்.

அதே சமயம், ஜப்பான் வீராங்கனை நோமி ஒசாகா முதல் சுற்றில் வென்ற போதிலும், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மறுத்த காரணத்தால் 15 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

கிராண்ட்ஸ்லாம்களில் ஒன்றான பிராஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கியுள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தி்ல் நடப்பு ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியனும், ஜப்பான் வீராங்கனையுமான நோமி ஒசாவாவை எதிர்கொண்டார் பாட்ரிகா மரியா டிக். இந்த ஆட்டத்தில் பாட்ரிக் மரியா டிக்கை 6-4, 7-6 என்ற கணக்கில் வீழ்த்தினார் ஒசாமா.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குறைந்த அளவிலான பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளி்க்கப்பட்டிருந்தது. இதனால் 5 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் அனுமதிக்கப்படவில்லை.
பிரெஞ்சு ஓபன் போட்டி விதிப்படி, போட்டியில் கிளமிறங்கும் இரு வீரர்கள் அல்லது வீராங்கனைகள் கண்டிப்பாக ஊடகங்களுக்குச் சேர்ந்து பேட்டி அளிக்க வேண்டும்.

ஆனால், முதல் சுற்றில் வென்ற பின் ஊடகங்களைச் சந்திக்க மறுத்து விட்டு ஒசாகா சென்றுவிட்டார். போட்டித் தொடரின் விதிமுறைகளுக்கு முரணாக வீரர்கள் செயல்பட்டால் 20 ஆயிரம் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இதையடுத்து, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மறுத்த ஒசாகாவுக்கு 15 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த சுற்றுகளில் ஒசாகா இது போன்று செய்தால், அவருக்கு அடுத்து வரும் கிராண்ட்ஸ்லாம்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆடவர் ஒற்றைப் பிரிவில் நடப்பு யுஎஸ் ஓபன் சாம்பியன் டோமினிக் தீமை எதிர்கொண்டார் தர நிலையில் 68-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீரர் பாப்லோ அன்டுஜார். மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டோமினிக் தீமை 4-6, 5-7, 6-3, 6-4, 6-4 என்ற செட்களில் போராடி வீழ்த்தினார் பாப்லோ.

முதல் இரு செட்களை ஜபப்ான் வீரர் கைப்பற்றிய போதிலும் அடுத்த இரு செட்களை டோமினிக் தீம் வென்று கடும் சவால் அளித்தார். வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி செட்டில் டோமினிக்கை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்தார் பாப்லோ.