17 வயது மகளை கட்டிக்கொடுக்க சொல்லி, தாயை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப் பதிவு

சென்னை, கண்ணகி நகர் பகுதியில், 17 வயது மகளை கட்டிக்கொடுக்க சொல்லி, தாயை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்தனர்.

கண்ணகிநகர் சுனாமி குடியிருப்பு 56வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் காதர் பாட்ஷா(21).

இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காதர் பாட்ஷா, அந்த சிறுமியின் தாயை வழிமறித்து தனக்கு அவரது மகளை திருமணம் செய்து தரும்படி கேட்டுள்ளார். இதற்கு சிறுமியின் தாய் எதிர்ப்பு தெரிவித்துயுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே பாட்ஷா, தன்னிடமிருந்த கத்தியை காட்டி தனக்கு அந்த சிறுமியை திருமணம் செய்து தரவில்லை என்றால் அனைவரையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாய், கண்ணகிநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் காதர் பாட்ஷா மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.