கட்டட விபத்தில் பெண் பலி ஒப்பந்ததாரர் கைது

கட்டட விபத்தில், பெண் பொறியாளர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக இருந்த ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில், பழமையான கட்டடம் இடிக்கும் போது, சுவர் இடிந்து விழுந்து, மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த மென் பொறியாளர் பத்மபிரியா(22) என்பவர் உயிரிழந்தார். திருச்சியை சேர்ந்த விக்னேஷ் குமார் படுகாயமடைந்தார்.
கட்டடம் இடிக்கும் போது உரிய பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு தராத கரணத்தில் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன் தினம் ஜேசிபி டிரைவர் ஞானசேகர், ஓட்டுநர் பாலாஜி ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஒப்பந்ததாரர் ஜாகீர் உசேன்(43) என்பவரை நேற்று கைது செய்தனர். கட்டட உரிமையாளர் சையத் அலி, பொறியாளர் ஷேக் ஆகியோரை தேடி வருகின்றனர்.
உயிருக்கு பாதுகாப்பு இல்லையா?
கட்டட இடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு, நேற்று ஆயிரம் விளக்கு பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நடைப்பாதையில் நடந்தால் உயிருக்கு பாதுகாப்பு இல்லையா? உயிரிழந்த பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து மா.கம்யூ மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா கூறியதாவது:
இந்த கட்டடத்தை இடிப்பதற்கு, கடந்த 13ம் தேதி மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. ஆனால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவில்லை.
இதனால் தான் உயிர் பலி ஏற்பட்டது.சாலை வரி செலுத்தும் மக்களுக்கு உரிய பாதுகாபாபு தரவேண்டும். இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.