கேமிராவில் தலை காட்டிய புலி: மயக்க ஊசி எடுப்பதற்குள் மாயம்..!

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் ஒற்றை புலியை பிடிக்க நடத்தும் போராட்டத்தில் அதன் தலை மட்டும் கேமிராவில் சிக்கியது. ஆனால், மயக்க ஊசி எடுப்பதற்குள் அது மாயமானது இன்றும் தேடும் பணி தொடங்கியது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் மசின குடி பகுதியில் பலரை கொன்ற புலியை பிடிக்க ஆங்காங்கே கேமிராக்கள் பொருத்தப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோழிக்கண்டி கிராமம் வனப்பகுதியில், அந்த புலி பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக கால் நடை மருத்துவர்கள் வனத்துறையயினர் ஆகியோர் விரைந்து வந்து, மயக்க ஊசி செலுத்தி, புலியை பிடிப்பதற்குள் அது மீண்டும் மாயமானது.

இரவு வெகு நேரமாக தேடியும் சிக்கவில்லை. இன்று மீண்டும் தேடும் பணி தொடங்கியது. புலியை விரைவில் பிடித்து விடுவோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may have missed