கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் உருண்டோடி விபத்து எம்.பி.பி.எஸ் மாணவிகள் 2 பேர் பலி..!

நெல்லை மாநகரத்தில், சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கார் உருண்டோடி விபத்தானதில், டூ வீலர்லில் வந்த எம்.பி.பி.எஸ் மாணவிகள் மற்றும் டிரைவர் ஆகியோர் பலியாகினர்.

திருநெல்வேலி மாநகரம், அரசு மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் திவ்ய காயத்ரி (21), பிரிடா ராணி ஏஞ்சலின் (22), திவ்யபாலா (21) ஆகிய மூன்று பேரும், இறுதியண்டு படித்து வந்தனர். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தனர்.

இன்று காலை, மூன்று பேரும், ரெட்டியார் பாளையம் வழியாக மொபட்டில் சென்றனர். நாகர்கோவில் சுசீந்தரத்தில் இருந்து, தூத்துக்குடிக்கு நோக்கி கார் ஒன்று வந்தது. அதில், சண்முக சுந்தரம் (41), சந்தோஷ் (45), ஆகியோர் இருந்தனர்.

சிவந்திப்பட்டி மலைப்பாதையில் கார் வரும் போது, டயர் வெடித்தது. இதில், கார் கட்டுப்பாட்டை இழந்தது, அங்கு வந்த டூ வீலர் மீது கார் மோதியது. இந்த விபத்தில் திவ்ய காயத்ரி, பிரிடா ஏஞ்சலின்ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திவ்யபாலா படுகாயம் அடைந்தார்.

காரில் வந்த சண்முக சுந்தரமும் இறந்தார். சந்தோஷ் காயமடைந்தார், திவய் காயத்ரி தென்காசி, ஆவுடையானூரை சேர்ந்தவர். தாய் சாரதா, தந்தை பொன்னுத்துரை, சேலம் வேளாண் துறை பொறியாளர், தம்பி ஒருவர் உள்ளார்,

பிரிடா ஏஞ்சலின் மதுரை பரசுராமன் பட்டி கங்கா நகரை சேர்ந்தவர் ஆவார். ஒரே நேரத்தில், இரண்டு மருத்துவகல்லூரி மாணவிகள், டிரைவர் இறந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.