நெல்லையில் கனமழையில் இடி தாக்கி, 2 பெண்கள் பலி:

நெல்லை மாநகரத்தில், கனமழை பெய்தபோது இடி தாக்கியதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லை மாநகரம் முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. அப்போது காற்றுடன், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மேலப்பாளையம், கருங்கால் வாய்க்கால் பாலம் வயல்வெளியில் வேலை பார்த்தபோது மூன்று பெண்கள் இடி தாக்கி பலத்த காயமடைந்தனர்.

அவர்களை உடனடியாக மீட்டு, ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பாலேஸ்வரி (22), முத்துமாரி (36) ஆகியோர் உயிரிழந்தனர். வள்ளியம்மாள் (60) தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இந்த சம்ப்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.